ADDED : மே 31, 2010 12:31 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கோயில் உண்டியலை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.தும்மிச்சம்பட்டி, குப்பணன் சந்தில் புதர் காளியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் மரத்தாலான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தும்மிச்சம்பட்டி, ஐந்து குழாய் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் மணிகண்டன் (15) உண்டியலை திறந்து பணத்தை திருடிக் கொண்டிருந்தான். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ்(24) என்பவரும் பக்கத்து வீட்டுக்காரர்களும் மணிகண்டனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.